search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காள தேச கேப்டன் ஹெல்மெட்டை தாக்கிய பந்து: உறைந்து போன தென்ஆப்பிரிக்க வீரர்கள்
    X

    வங்காள தேச கேப்டன் ஹெல்மெட்டை தாக்கிய பந்து: உறைந்து போன தென்ஆப்பிரிக்க வீரர்கள்

    பவுன்சர் பந்து வங்காள தேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் ஹெல்மெட்டை தாக்கியதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
    தென்ஆப்பிரிக்கா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பிளோயம்ஃபோன்டின் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் வங்காள தேசம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்து. ஆட்டத்தின் 14-வது ஓவரை தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டுயன்னே ஆலிவியர் வீசினார். அந்த ஓவரை வங்காள தேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் எதிர்கொண்டார்.

    11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆலிவியர் வீசிய பவுன்சர் பந்தை தவிர்ப்பதற்காக குனிய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பந்து முஷ்பிகுர் ரஹிமின் ஹெல்மெட்டின் இடது பக்கத்தை பலமாக தாக்கியது.



    பந்து தாக்கியதும் உடனடியாக கிழே விழவில்லை என்றாலும், தள்ளாடியபடி சிறிது தூரம் நடந்தபின் தரையில் முட்டிபோட்டி அமர்ந்தார். இதைப் பார்த்த தென்ஆப்பிரிக்க வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக வங்காள தேச அணி டாக்டர் மற்றும் தென்ஆப்பிரிக்க அணி டாக்டர் மைதானத்திற்குள் விரைந்து முஷ்பிகுர் ரஹிமை பரிசோதித்தனர்.

    பின்னர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வலியுறுத்தினர். ஆனால் முஷ்பிகுர் ரஹிம் தொடர்ந்து விளையாடினார். பவுன்சர்கள் வீசப்பட்ட போதிலும் அதை சாதுர்யமாக தடுத்து ஆடினார். இறுதியில் 26 ரன்கள் எடுத்து எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அவுட்டாகி வெளியேறிய பின்னர் தலையில் காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பதை குறித்து அறிய மருத்துவமனை சென்றுள்ளார்.
    Next Story
    ×