search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்
    X

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் ஹம்சா இடம்பிடித்துள்ளார். ஹரிஸ் சோஹைல், பிலால் ஆசிப் ஆகியோரும் உள்ளனர்.
    பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டிக்கு முன்பு ஐந்து நாட்கள் கொண்ட பயிற்சி முகாமிற்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப்பின் தற்போதுதான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது, அந்த தொடரில் விளையாடிய மிஸ்பா-உல்-ஹக், யூனிஸ்கான் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர்.



    எனவே பாகிஸ்தான் அணி அந்த இடத்தில் இரண்டு சிறந்த வீரர்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஹரிஸ் சோஹைல், உஸ்மான் சலாகுதீன் ஆகியோர் மிஸ்பா-உல்-ஹக், யூனிஸ்கானுக்குப் பதிலாக களம் இறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இருவருக்கும் ஏற்கனவே ஒருநாள் போட்டியில் விளையாடிய அனுபவம் உள்ளது. டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவது இதுதான் முதல் முறை. வேகப்பந்து வீச்சாளர் மிர் ஹம்சா அணியில் இடம்பிடித்துள்ளார்.

    இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. அசார் அலி, 2. ஷேன் மசூத், 3. சமி அஸ்லம், 4. பாபர் ஆசம், 5. ஆசாத் ஷபிக், 6. ஹரிஸ் சோஹைல், 7. உஸ்மான் சலாகுதீன், 8. சர்பிராஸ் அஹமது (கேப்டன்), 9. யாசீர் ஷா, 10. மொகமது அஸ்கார், 11. பிலால் ஆசிப், 12. மிர் ஹம்சா, 13. மொகமது அமிர், 14. ஹசன் அலி, 15. மொகமது அப்பாஸ், 16. வஹாப் ரியாஸ்.
    Next Story
    ×