search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை பயிற்சி ஆட்டம்: 103 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
    X

    சென்னை பயிற்சி ஆட்டம்: 103 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக ஆஸ்திரேலியா இன்று இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணியை சந்தித்தது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. டேவிட் வார்னர், ஹில்டன் கார்ட்ரைட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    கார்ட்ரைட் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். வார்னர் 48 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்தார்.
    அடுத்து களம் இறங்கியகேப்டன் ஸ்மித் 68 பந்தில் 55 ரன்னும், ட்ராவிஸ் ஹெட் 63 பந்தில் 65 ரன்களும் சேர்த்தனர்.



    மேக்ஸ்வெல் 14 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 60 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 76 ரன்களும், விக்கெட் கீப்பர் வடே 24 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 45 ரன்களும் விளாச ஆஸ்திரேலியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.

    பின்னர் 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணியின் கோஸ்வாமி, ராகுல் திரிபாதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். திரிபாதி 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து மயாங் அகர்வால் களம் இறங்கினார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. கோஸ்வாமி 43 ரன்னும், மயாங் அகர்வால் 42 ரன்களும் சேர்த்தனர்.

    அதன்பின் வந்த நிதிஷ் ராணா (19), குர்கீரத் சிங் மான் (27), ஷிவம் சவுதாரி (4), வாஷிங்டன் சுந்தர் (11), கோவிந்தா போத்தர் (0) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.



    அதன்பின் வந்த கார்னிவர் 28 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்களும், குஷாங் பட்டேல் அவுட்டாகாமல் 41 ரன்களும் எடுக்க இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் 48.2 ஓவரில் 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் ஆஸ்திரேலியா 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் அஷ்டோன் அகர் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    Next Story
    ×