search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ... ஸ்லெட்ஜிங் செய்த பவுலரை பேட்டிங்கால் நோகடித்து பழிக்குப்பழி வாங்கிய பேட்ஸ்மேன்
    X

    வீடியோ... ஸ்லெட்ஜிங் செய்த பவுலரை பேட்டிங்கால் நோகடித்து பழிக்குப்பழி வாங்கிய பேட்ஸ்மேன்

    கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் ஸ்லெட்ஜிங் செய்த பவுலரை, பேட்ஸ்மேன் தனது பேட்டிங்கால் நோகடித்து பழிக்குப்பழி வாங்குவது தொடர்பான வீடியோவை பார்த்து மகிழுங்கள்.
    வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. ஆறு அணிகள் இடம்பிடித்த இந்த தொடரில் ஒரு அணி மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.

    அதன்படி ஜமைக்கா தல்லாவாஸ் - கயானா அமேசான் வாரியஸ் அணிகள் மோதின. கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் சாட்விக் வால்டன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்து வீசினார். இவரது பந்து வீச்சில் வால்டன் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.

    உடனே வால்டனிடம் சென்று இந்த ஷாட்டை குறித்து வைத்துக்கொள் என்பதுபோல் கையெழுத்திடும் வகையில் ஸ்லெட்ஜிங் செய்தார். வால்டன் பொறுமையாக வெளியில் சென்றுவிட்டார்.

    இரு அணிகளும் மீண்டும் செப்டம்பர் 1-ந்தேதி மோதியது. அப்போது வால்டன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்து வீசினார். முந்தைய போட்டிக்கு பழிக்குப்பழி வாங்க வால்டன் நினைத்தார்.

    கேஸ்ரிக் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அப்போது கேஸ்ரிக்கை பார்த்து உனது டைரியில் எழுதி வைத்துக் கொள் என்ற தொனியில் ஸ்லெட்ஜிங் செய்தார். அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கினார். மேலும் இரண்டு பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அனுப்பினார். தொடர்ந்து எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என ஸ்லெட்ஜிங் செய்ய, கேஸ்ரிக் வில்லியம்ஸ் அப்படியே துவண்டுவிட்டார். ஒரே ஒவரில் நான்கு பந்துகளை விரட்டி பழி தீர்த்துக் கொண்டார்.
    Next Story
    ×