என் மலர்tooltip icon

    செய்திகள்

    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது
    X

    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது

    லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து 2-1 என தொடரைக் கைப்பற்றியது
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்னில் சுருண்டது. பென் ஸ்டோக்ஸ் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 194 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் 60 ரன்கள் எடுத்தார். ரோச் 5 விக்கெட்டும், ஹோல்டர் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜேம்ஸ் ஆண்டர்சனின் அபார பந்து வீச்சால் மூன்றாவது நாளான இன்று 177 ரன்னில் சுருண்டது. ஷாய் ஹோப் 62 ரன்னும், பாவெல் 45 ரன்னும் எடுத்தனர். ஆண்டர்சன் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இங்கிலாந்தை விட வெஸ்ட் இண்டீஸ் 106 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.



    தொடக்க வீரர்களாக அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள். 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குக் ஆட்டம் இழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஸ்டோன்மேன் உடன் வெஸ்லே ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். இதனால் 28 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-1 எனக் கைப்பற்றியது.
    Next Story
    ×