என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அலஸ்டைர் குக்
Byமாலை மலர்22 Aug 2017 11:03 AM GMT (Updated: 22 Aug 2017 11:03 AM GMT)
சச்சின் தெண்டுல்கரின் வரலாற்றுச் சாதனைகளுக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்.
‘இந்திய கிரிக்கெட் கடவுள்’ என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 போட்டியில் விளையாடி 51 சதங்களுடன் 15921 ரன்கள் குவித்துள்ளார். 51 சதங்களும், 15921 ரன்களும் என்பது வரலாற்றுச் சாதனை. சச்சின் காலத்தில் விளையாடிய ரிக்கி பாண்டிங் 13378, கல்லீஸ் 13289, டிராவிட் 13288, சங்ககரா 12400, லாரா 11953, சந்தர்பால் 11867, ஜெயவர்தனே 11814 ரன்கள் குவித்துள்ளனர்.
டி20 கிரிக்கெட் போட்டி தலை தூக்கியதால் டெஸ்ட் போட்டிகளில் இனிமேல் வரும் வீரர்கள் 200 போட்டிகளுக்கு மேல் விளையாடுவது கடினம். அப்படி விளையாடினாலும் தெண்டுல்கர் அடித்துள்ள 15921 ரன்களை சேர்ப்பது மிகமிகக் கடினம் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதனால் சச்சின் தெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாளராக திகழ்வார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தெண்டுல்கர் சாதனைக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டைர் குக் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார். இங்கிலாந்து அணியில் மிகவும் இளம் வயதில் அறிமுகமான அலஸ்டைர் குக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
அலஸ்டைர் குக் 145 போட்டிகளில் விளையாடி 31 சதங்களுடன் 11568 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் தெண்டுல்கரை விட 4353 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார். தற்போது அவருக்கு 32 வயதுதான் ஆகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குக் சிறப்பான வகையில் ஆடவில்லை. இதனால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறலாம் அல்லது அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற செய்தி வந்து கொண்டிருந்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து மிண்டும் பார்ஃமுக்கு திரும்பியுள்ளார்.
இப்படியே விளையாடினால் குக் இன்னும் 4 வருடத்திற்கு அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. அப்படி இடம்பிடித்தால் 4353 ரன்கள் எடுக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை சுமார் 500 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், சாதனைக்காக குக்கை இங்கிலாந்து அணி தொடர்ந்து வலியுறுத்தும். இதனால் குக் சச்சின் தெண்டுல்கரின் சாதனைக்கு அச்சுறுத்தலாகவே உள்ளார்.

Next Story
×