search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலீஷ் பிரிமீயர் லீ்க் கால்பந்து: ஸ்வான்சீ அணியை 4-0 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்
    X

    இங்கிலீஷ் பிரிமீயர் லீ்க் கால்பந்து: ஸ்வான்சீ அணியை 4-0 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்

    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் ஸ்வான்சீ அணியை 4-0 என வீழ்த்தி மான்செஸ்டர் அணி 2-வது வெற்றியை பெற்றுள்ளது.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து 2017-18 சீசன் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. இன்றைய ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைடெட், ஸ்வான்சீ அணியை எதிர்கொண்டது.

    ஆட்டத்தின் முதல்பாதி நேரத்தின் கடைசி நிமிடமான 45-வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் எரிக் பெய்லி முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல்பாதி நேரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.


    கோல்அடித்த மார்சியலை பாராட்டும் போக்பா

    2-வது பாதி நேர ஆட்டதில் சுமார் 35 நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. கடைசி 10 நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.


    மான்செஸ்டர் வீரர் லூக்காகு

    அந்த அணியின் ரொமேலு லூக்காகு 80-வது நிமிடத்திலும், போக்பா 82-வது நமிடத்திலும், அந்தோணி மார்சியல் 84 நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் மான்செஸ்டர் அணி 4-0 என ஸ்வான்சீ அணியை வீழ்த்தியது.


    கோல் அடித்த சந்தோஷத்தில் போக்பா

    சீசன் தொடக்கத்தில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்று மான்செஸ்டர் யுனைடெட் அசத்தியுள்ளது.
    Next Story
    ×