search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி
    X

    துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை அந்நாட்டில் தொடங்க இருக்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை அந்நாட்டில் தொடங்க இருக்கிறார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பராக உள்ள மகேந்திர சிங் டோனி துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டின் எம்.எஸ்.டோனி என்ற பெயரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க இருக்கிறார்.

    படிப்படியாக இந்த கிரிக்கெட் அகாடமியை ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் ஆகியோர் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் டோனியும் சேர இருக்கிறார். 

    மற்ற வீரர்கள் அனைவரும் இந்தியாவில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், டோனி வெளிநாட்டில் தொடங்க உள்ளார். கிரிக்கெட் அகாடமி தொடங்குவது சம்பந்தமாக பணிகள் மேற்கொள்ள அடுத்த மாதம் டோனி துபாய் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×