search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் கடும் சவாலாக விளங்கும்: அம்புரோஸ்
    X

    இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் கடும் சவாலாக விளங்கும்: அம்புரோஸ்

    இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்டில் ஒன்றையாவது வெஸ்ட் இண்டீஸ் வெல்லும் என அம்புரோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு டெஸ்ட் ஆக நடக்கிறது. இங்கிலாந்தில் நடைபெறும் முதல் பகல்- இரவு டெஸ்ட் இதுவாகும்.


    இங்கிலாந்து அணி சமீபத்தில்தான் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியிருந்தது. இதனால் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் ஒன்றிலாவது வெற்றிபெறும். அல்லது இங்கிலாந்துக்கு கடும் சவாலாக விளங்கும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அம்புரோஸ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அம்புரோஸ் கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலாவது வெற்றி பெறும் அல்லது இங்கிலாந்து அணிக்கு கடும் சவாலாக விளங்கும் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால், யதார்த்தமான நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அப்படி விளையாடுவார்களா? என்பதை என்னால் உறுதியாக கூற இயலாது’’ என்றார்.

    அம்புரோஸ் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். வால்ஷ் உடன் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அபாரமான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டிஸ் அணி 2014-ம் ஆண்டு வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது. அதன்பின் தொடர்ந்து 6 டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது.
    Next Story
    ×