search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போல்ட் காயத்திற்கு டி.வி. செய்த மாயமே காரணம்: காட்லின் சாடல்
    X

    போல்ட் காயத்திற்கு டி.வி. செய்த மாயமே காரணம்: காட்லின் சாடல்

    4x100 மீட்டர் ஓட்டப் போட்டியின்போது உசைன் போல்டிற்கு ஏற்பட்ட காயத்திற்கு டிவி செய்த மாயமே காரணம் என காட்லின் குற்றம்சாட்டியுள்ளார்.
    லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட் 4x100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டிதான் இவர் கலந்து கொள்ளும் கடைசி தடகள போட்டி என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து உசேன் போல்ட் பங்கேற்கும் இந்த போட்டி பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. உசைன் போல்ட்டின் கடைசி போட்டி என்பதால் அரங்கம் முழுவதும் அவரது ரசிகர்கள் கூடியிருந்தனர்.



    இந்நிலையில் போட்டியின்போது 4-வது வீரராக ஓடிய உசைன் போல்ட் தனது பாணியில் கடைசி நேரத்தில் வேகமெடுத்து தனக்கு முன் ஓடுபவரை முந்தும் முயற்சியின்போது எதிர்பாராத விதமாக அவரது இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வலியில் ஓட முடியாமல் டிராக்கிலேயே விழுந்தார். இதனால் உசைன் போல்ட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.



    உசைன் போல்ட் காயத்திற்கு சுமார் 45 நிமிடங்கள் காக்க வைத்ததே காரணம் என்று உசைன் போல்ட் உடன் ஓடிய சக வீரர் பிளேக் குற்றம்சாட்டியுள்ளார். இதை அமெரிக்க வீரர் காட்லின் ஒத்துக் கொண்டுள்ளார்.

    4x100 மீட்டர் ஓட்டத்திற்கு முன்பு காத்திருந்தது குறித்து யோகன் பிளேக் கூறுகையில் ‘‘உசைன் போல்ட் மிகவும் குளிர்ச்சான நிலையில் இருந்தார். நமது ஓட்டத்திற்கு முன் 40 நிமிடங்கள் மற்றும் இரண்டு பதக்கம் வழங்கப்பட வேண்டியதற்காக காக்க வைத்திருப்து முட்டாள்தனமானது என உசைன் போல்ட் என்னிடம் தெரிவித்தார்’’ என்று கூறியிருந்தார்.

    இந்த கருத்தை ஆமோதித்துள்ள காட்லின் ‘‘இதற்கு தொலைக்காட்சியின் திட்டமிடல் தொடர்பான மாயம்தான் காரணம் என கருதுகிறேன். ஒவ்வொருவரும் தங்களது பார்வையாளர்களை தருப்திப்படுத்த சரியாக திட்டமிட வேண்டியுள்ளது.



    ஆனால், என்னை பொறுத்தவரையில் நான் நினைப்பது என்னவென்றால், நாங்கள் ஸ்டேடியத்தில் உடைகள் இல்லாமல் நீண்ட நேரம் தாமதப்படுத்தி வைக்கப்ட்டிருந்தோம். அங்கு சற்று அனலாக இருந்தது. வியர்வை எல்லாம் வெளியேறியதால் உடல் சூட்டை நான் இழந்துவிட்டேன்’’ என்றார்.
    Next Story
    ×