search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரீபியன் டி20 லீக், கவுண்டி போட்டியில் விளையாடும் வீரர்களை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்
    X

    கரீபியன் டி20 லீக், கவுண்டி போட்டியில் விளையாடும் வீரர்களை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்

    வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமீயர் லீக் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டிகளில் விளையாடும் வீரர்களை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் மத்திய ஒப்பந்தம் செய்துள்ள வீரர்கள் மற்றும் ஒப்பந்தம் செய்யப்படாத வீரர்கள் என மொத்தம் 13 பேர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியோடு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் கரீபியன் டி20 கிரிக்கெட் தொடரிலும், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டியிலும் விளையாடி வருகிறார்கள்.

    ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி முதல் செப்டம்பர் 9-ந்தேதி வரை கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் நடைபெறுகிறது. இதில் ஒப்பந்தத்தில் உள்ள 7 வீரர்களும், ஒப்பந்தம் செய்யப்படாத கம்ரான் அக்மல், சோகைல் தன்வீர் மற்றும் மொகமது ஷமி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.



    இவர்கள் அனைவரும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான நேஷனல் டி20 கோப்பை-க்கு திரும்ப வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இவர்கள் ராவல் பிண்டி, பைசாலாபாத் மற்றும் லாகூர் ஒயிட் ஆகிய அணிகளில் இடம்பிடித்துள்ளனர்.

    இங்கிலாந்து கவுண்டி அணியில் மொகமது ஆமிர், சர்பிராஸ் அகமது, பகர் சமான் ஆகியோர் விளையாடுகிறார்கள். இவர்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது.

    பாகிஸ்தான் அணி உலக லெவன் அணிக்கெதிராக டி20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காகத்தான் வீரர்கள் உள்ளூர் தொடரில் விளையாடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×