search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை 291 ரன்னில் ஆல்-அவுட்
    X

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இலங்கை 291 ரன்னில் ஆல்-அவுட்

    காலேயில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 291 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
    காலே:

    இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 600 ரன் குவித்தது. ஷிகர் தவான் (190 ரன்), புஜாரா (153) சதம் அடித்தனர். ரகானே 57 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 50 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இலங்கை அணி இந்தியாவின் அபார பந்து வீச்சில் திணறியது. கருணா ரத்னே 2 ரன்னிலும், குணதிலகா 16 ரன்னிலும், குசல்மென்டிஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். தரங்கா 64 ரன்னில், டிக்வெலா 8 ரன்னில் வெளியேறினர்.

    நேற்றைய 2-ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 44 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து இருந்தது. மேத்யூஸ் 54 ரன்னுடனும், தில்ருவான் பெரைரா 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    பாலோ-ஆனை தவிர்க்க இலங்கை இன்னும் 247 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இன்று 3-ம் நாள் ஆட்டம் நடந்தது. மேத்யூசும், தில்ருவான் பெரைரா தொடர்ந்து விளையாடினார்கள். முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இதில் பெரைரா பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரில் சுழற்பந்து வீச்சை கேப்டன் கோலி கொண்டு வந்தார். அந்த ஓவரை ஜடேஜா வீசினார்.

    இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57-வது ஓவரில் இலங்கை 200 ரன்னை தொட்டது. இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். அவரது பந்தில் மேத்யூஸ் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.


    அவர் 130 பந்தில் 83 ரன் எடுத்தார். அடுத்து தில்ருவான்பெரைராவுடன் கேப்டன் ஹெராத் ஜோடி சேர்ந்தார்.

    பெரைரா 94 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடியையும் ஜடேஜா பிரித்தார். அவரது பந்தில் ஹெராத் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரதீப் களம் வந்தார். மறுமுனையில் இருந்ததில் ருவான் பெரைரா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் பவுண்டரி, சிக்சர்களாக அடித்தார். உணவு இடைவேளையின் போது இலங்கை 77 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்திருந்தது. பெரைரா 90 ரன்னுடனும், குமாரா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளைக்கு பிறகு குமாரா அவுட் ஆனார். காயத்தால் விலகியுள்ள குணரத்னே ஆடவில்லை. இதனால் இலங்கை அணி 291 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார். பாலோ ஆனை தவிர்க்க இலங்கை 401 ரன் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா பாலோ ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது.
    Next Story
    ×