search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி பெற்ற ஹாமில்டனை மேலே தூக்கிப்போட்டு மகிழும் ரசிகர்கள்.
    X
    வெற்றி பெற்ற ஹாமில்டனை மேலே தூக்கிப்போட்டு மகிழும் ரசிகர்கள்.

    பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம்

    சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்த பிரிட்டிஷ் கிராண்ட்பிரியில் ஹாமில்டனின் 5-வது வெற்றியாக அமைந்தது. இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும்.
    சில்வர்ஸ்டோன் :

    இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.196 கிலோ மீட்டர் ஆகும். இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் உள்ளூர் நாயகன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 21 நிமிடம் 27.430 வினாடிகளில் இலக்கை கடந்து 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.

    இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும். அத்துடன் பிரிட்டிஷ் கிராண்ட்பிரியில் ஹாமில்டனின் 5-வது வெற்றியாக அமைந்தது. பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 2-வதாக வந்தார். முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 7-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

    இதுவரை நடந்துள்ள 10 சுற்றுகள் முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் வெட்டல் 177 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 176 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், போட்டாஸ் 154 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்கள். அடுத்த சுற்று போட்டி ஹங்கேரியில் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×