என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்சு ஓபன்: நடால் அரையிறுதிக்கு முன்னேறினார் - நடப்பு சாம்பியன் ஜோகோவிச் தோல்வி
    X

    பிரெஞ்சு ஓபன்: நடால் அரையிறுதிக்கு முன்னேறினார் - நடப்பு சாம்பியன் ஜோகோவிச் தோல்வி

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார். நடப்பு சாம்பியன் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.
    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், உலகின் முன்னணி வீரரும் 9 முறை பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவருமான ரபேல் நடால் (ஸ்பெயின்), சக நாட்டு வீரர் பப்லோ கரேனோ பஸ்டாவை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றினார் நடால். இந்த செட் முடியும் தருவாயில் பஸ்டாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்த வலியுடன் இரண்டாவது செட்டில் ஆடினார். இந்த செட்டில் நடால் 2-0 என முன்னிலை பெற்றிருந்தபோது, பஸ்டாவால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. இதனால், அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே, நடால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், உலகின் இரண்டாம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச்சும் ஆஸ்திரேலியாவின் டோம்னிக் தீமும் மோதினர். 7 ஆம் நிலை வீரரான டோம்னிக் தீம், ஜோகோவிச்சுக்கு கடும் சவால் அளித்தார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-6, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை டோம்னிக் தீம் தோற்கடித்தார்.

    இந்த தோல்வியின் மூலம் நடப்பு சாம்பியனான ஜோகோவிச் நடப்பு தொடரில் இருந்து வெளியேறினார். வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள அரையிறுதியில் டோம்னிக் தீம், ரஃபேல் நடாலை சந்திக்க உள்ளார்.
    Next Story
    ×