search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: வங்காள தேசம் 341 ரன்கள் குவிப்பு
    X

    பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: வங்காள தேசம் 341 ரன்கள் குவிப்பு

    பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், தமீம் இக்பால் சதத்தால் வங்காள தேச அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் குவித்துள்ளது.
    சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 1-ந்தேதி) தொடங்குகிறது. அதற்கு முன் சில அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றன. வங்காள தேசம் இன்று பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி வங்காளதேச அணியின் தமீம் இக்பால், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சர்கார் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது வங்காள தேசம் 6.1 ஓவரில் 27 ரன்கள் எடுத்திருந்தது.


    61 ரன்கள் சேர்த்த இம்ருல் கெய்ஸ்

    2-வது விக்கெட்டுக்கு தமீம் இக்பால் உடன் இம்ருல் கெய்ஸ் ஜோடி சேர்ந்தார். அந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இம்ருல் கெய்ஸ் 62 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தமீம் இக்பால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் குவித்தது.

    சதம் அடித்த தமீம் இக்பால் 93 பந்தில் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 35 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த சஹிப் அல் ஹசன் 23 ரன்னும், மெஹ்முதுல்லா 29 ரன்னும், மொசாடெக் ஹொசைன் 26 ரன்னும், மெகதி ஹசன் மிராஸ் 13 ரன்களும் எடுக்க, வங்காள தேசம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் குவித்தது.


    4 விக்கெட் வீழ்த்திய ஜுனைத்கான்

    பாகிஸ்தான் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத்கான் 9 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×