search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: 8 போட்டிக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன
    X

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: 8 போட்டிக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன

    இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் 8 போட்டிக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்துள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
    ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் வருகிற 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகள் வேல்ஸில் உள்ள கார்டிஃப், இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மற்றும் ஓவல் ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெறுகிறது,.

    இதில் 8 முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வங்காள தேசம் ஆகிய நான்கு அணிகள் ஒரு பிரிவிலும், இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் ஒரு பிரிவிலும் இடம் பிடித்துள்ளனர்.

    இதில் இந்தியா - பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டிகளுக்கு ரசிகர்களிடையே எதிர்ப்பு உள்ளது. இதனால் இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் மளமளவென விற்றுத் தீர்ந்தன. இதுபோன்று 8 போட்டிகளுக்கான விக்கெட்டுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுக்கள் உள்ள நிலையில், இங்கிலாந்து - வங்காள தேசம் மோதும் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்பனையாகியுள்ளன.

    இந்த தொடருக்கான டிக்கெட்டுக்கள் விற்பனை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கியது. 60 நாடுகளில் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட விக்கெட் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 ஆயிரம் டிக்கெட்டுக்கள் விற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×