search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: முதல் லெக்கில் 2-0 என மொனாகோவை வீழ்த்தியது யுவான்டஸ்
    X

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: முதல் லெக்கில் 2-0 என மொனாகோவை வீழ்த்தியது யுவான்டஸ்

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் மொனாகோவிற்கு எதிரான முதல் லெக்கில் ஹிகுவைனின் அபார ஆட்டத்தால் யுவான்டஸ் 2-0 என வெற்றி பெற்றது.
    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியின் முதல் லெக் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் யுவான்டஸ் - மொனாகோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டம் தொடங்கியது முதலே யுவான்டஸ் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் அந்த அணியின் ஹிகுவைன் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பிறகு முதல் பாதி நேரத்தில் இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் 1-0 என யுவான்டஸ் முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும், ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் ஹிகுவைன் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேரத்தில் மொனாகோ அணி வீரர்கள் கோல் அடிக்க கடும் முயற்சி எடுத்தனர். ஆனால் யுவான்டசின் சிறப்பான தடுப்பாட்டத்தாலும், கோல் கீப்பரும் கேப்டனும் ஆன புஃப்போன் சிறப்பான ஆட்டத்தாலும் மொனாகோவால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 2-0 என யுவான்டஸ் வெற்றி பெற்றது.

    மற்றொரு அரையிறுதி போட்டியின் முதல் லெக்கில் ரியல் மாட்ரிட் 3-0 என அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியிருந்தது. யுவான்டஸ் - மொனாகோ மோதும் 2-வது லெக் 10-ந்தேதியும், ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதும் போட்டி 11-ந்தேதியும் நடக்கிறது.
    Next Story
    ×