search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசை: 4-வது இடத்திற்கு சரிந்தது இந்தியா; முதல் இடத்தில் நியூசிலாந்து
    X

    ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசை: 4-வது இடத்திற்கு சரிந்தது இந்தியா; முதல் இடத்தில் நியூசிலாந்து

    வருடாந்திர முடிவில் வெளியிடப்பட்டுள்ள ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா 6 புள்ளிகளை இழந்து நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது.
    வருடந்தோறும் மே 1-ந்தேதி வருடாந்திர தரவரிசையை ஐ.சி.சி. வெளியிடப்படும். அதன்படி டி20 கிரிக்கெட் அணிக்கான தரவரிசை வெளியிடப்பட்டது.

    இதில் இந்தியா 6 புள்ளிகளை இழந்து 118 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. 125 புள்ளிகளுடன் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் ஐந்து புள்ளிகள் பெற்று 121 புள்ளியுடன் 2-வது இடத்தை இங்கிலாந்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது.



    இங்கிலாந்து 7 புள்ளிகள் பெற்றதால் மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது. தென்ஆப்பிரிக்கா 6 புள்ளிகளை இழந்து, இரண்டு இடங்கள் சரிந்து 5-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 6-வது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 7-வது இடத்திலும், இலங்கை 8-வது இடத்திலும் உள்ளது.

    நேற்று வெளியிடப்பட்ட ஒருநாள் போட்டிக்கான அணிகள் தரவரிசையில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்திருந்தது.
    Next Story
    ×