search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுவைமிகு சமையலுக்கு உதவும் நவீன மண் பாண்டங்கள்
    X

    சுவைமிகு சமையலுக்கு உதவும் நவீன மண் பாண்டங்கள்

    மண் பாண்டங்களில் சமைக்கும் உணவுகள் அனைத்தும் தனி சுவையும், கமகம மணத்தையும் அளிப்பதுடன் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தருகின்றன.
    உலகமே நவீனமயமாய் மாறினாலும், எத்தனையோ அவசர சமையல் கருவிகளும், உபகரணங்களும் உருவானாலும் நமது பழமையும், பாரம்பரியமும் நிறைந்த களிமண் பாத்திரங்களுக்கு ஈடாகாது. ஆதி காலத்தில் மனிதன் சமைத்து உண்ண ஆரம்பித்தபோது மண்ணை குழைத்து உருவாக்கிய பாத்திரங்கள் இன்றும் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்படுகின்றன. நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கிய சிந்து சமவெளி நாகரிகத்தில் ஏராளமான மண் பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

    மண் பாண்டங்கள் என்பவை விலை மலிவானதாகவும், மதிப்பு குறைந்த பொருட்கள் என்றவாறும் பெரும்பாலும் நினைக்கின்றனர். நவீன தொழிற்சாலைகள் அதிகரித்ததன் காரணமாக பலவித உலோக பாத்திரங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகி வந்துள்ளன. செம்பு, பித்தளை, எவர்சில்வர், அலுமினியம் என பாத்திரங்கள் மாறி மாறி வந்துள்ளன.

    ஆனாலும், இன்றளவும் இப்பாத்திரங்களுடன் போட்டி போட்டு கொண்டு மண் பாண்டங்களும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன. மண் பாண்டங்கள் எனும்போது அதில் வைக்கப்படும் தண்ணீர் முதல் சமைக்கும் உணவுகள் வரை அனைத்தும் தனி சுவையும், கமகம மணத்தையும் அளிப்பதுடன் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் தருகின்றன. எனவே, மண் பாண்டங்கள் தற்போது மீண்டும் நாகரீக வடிவங்களில் இல்லங்களில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

    மண் பாண்டத்தின் பெருமை அறிந்த மக்கள் அன்றாட சமையல்களுக்கு மண் பாத்திரங்கள் பயன்படுத்துகின்றனர். அதற்கேற்ப தற்போது அழகிய நவீன தோற்றத்துடன் மண் பாத்திரங்கள் உலா வருகின்றன.



    மண் வாசம் வீசும் மண் பாத்திரங்கள் :

    மண் பாண்டங்கள் எனும்போது சமையலுக்கு உகந்த பானை, வாணலி, தட்டுகள், தேநீர் கோப்பைகள், உணவு சேமிக்கும் ஜாடிகள், தண்ணீர் குவளைகள், தண்ணீல் பாட்டில்கள் என அனைத்தும் புதிய பளபளப்புடன் அழகிய வடிவமைப்பில் உருவாக்கப்படுகின்றன.

    அதுமட்டுமின்றி புதிய கைப்பிடி வசதி கொண்ட வாணலிகள், குக்கர், பிரை பேன் என நவீன பாத்திரங்களாகவும் மண் பாண்டங்கள் தயார் ஆகின்றன. இவையனைத்தும் தரமான களிமண் கொண்டே உருவாகின்றன.

    நவீன வசதிகளுடன் கூடிய மண் பாண்டங்கள் :

    நான்ஸ்டிக் பாத்திரங்களின் கைப்பிடி போன்று இரு பக்க கைப்பி, மேற்புறம் கண்ணாடி தட்டு என தனி சிறப்பு மண் பாண்டங்கள் வந்துள்ளன. அதுபோல் பிரை பேன் போன்று நீண்ட கைப்பிடி உடன் கூடிய பாத்திரமும், விசில் ஊதும் குக்கர் அமைப்பில் மண் குக்கர், கைப்பிடியுடன் கூடிய தண்ணீர் ஜெக், தேயிலை கப்கள், டீ செட், குழி பணியார சட்டி என அனைத்து வகை மண் பாண்டங்களும் நவீன இல்லங்களுக்கு ஏற்ப உருவாக்கப்படுகின்றன. மண் பாண்டங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

    மண் பாண்ட பராமரிப்பும், சிறப்பு அம்சங்களும்:

    அனைத்து விலையுயர்ந்த பாத்திரங்களை எப்படி பாதுகாப்புடன் வைத்துள்ளோம் அதுபோல் தான் மண் பாண்டத்தையும் பாதுகாக்க வேண்டும். அதனை தூய்மை செய்வது சுலபம்.

    புதிய மண் பாத்திரங்களை பயன்படுத்தும் முன் ஏழு நாட்கள் தண்ணீரில் ஹர வைத்த பிறகு பயன்படுத்த வேண்டும். கேஸ் அடுப்புகளிலேயே மிதமான வெப்பத்தில் மண் பாண்டங்களை சமைக்க பயன்படுத்தலாம். மண் பாத்திரத்தின் ஆயுட்காலம் நாம் பயன்படுத்தும் வகையிலேயே அமைகிறது. மண் பாத்திர சமையல் உணவில் உள்ள அமில தன்மையை போக்குகிறது.
    Next Story
    ×