சுவையாக சமைக்க எளிமையான சமையல் குறிப்புகள்..!

சுவையாக சமைக்க எளிமையான சமையல் குறிப்புகள்..!

Published on
தேங்காய் உடைக்கும் முன் தண்ணீரில் கழுவினால் எளிதாக உடையும்.
உளுந்து வடை செய்யும்போது, சிறிதளவு சேமியாத்தூள் தூவினால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பில்லாத தயிர் சேர்த்து வதக்கினால் காரக்கறியின் சுவையே அலாதிதான்.
எந்த வித ரசம் செய்தாலும், இறக்கும் முன்பு ஒரு கரண்டி தேங்காய்பால் சேர்த்து, நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்தால் ரசம் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து அல்வா செய்து, சிறிது பாதாம் எசன்ஸ் விட்டால் அசல் பாதாம் அல்வா போலவே இருக்கும்.
மிக்ஸியில் முதலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டபின், உளுந்தம் பருப்பைப் போட்டு அரைத்தால், உளுந்து மாவை மிக்ஸியிலிருந்து சுலபமாக வழித்தெடுக்கலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com