பயனுள்ள சில சமையல் குறிப்புகள் உங்களுக்காக..!

பயனுள்ள சில சமையல் குறிப்புகள் உங்களுக்காக..!

Published on
பருப்பு சீக்கிரம் வேக வைக்க பெருங்காயம் மற்றும் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். சீக்கிரமாகவே பருப்பு வெந்துவிடும்.
பாலக்கீரை சப்பாத்தி செய்பவர்கள் அதற்கு பதிலாக பசலிக்கீரையும் சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் ருசியாகவே இருக்கும்.
வேகவைத்த முட்டையை உடையாமல் எடுக்க, அதனை வேக வைக்கும் போது சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
கத்தரிக்காய் வெட்டும் போது நிறம் மாறாமல் இருக்க சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும்.
பாகற்காய் குழம்பு அல்லது பொரியல் செய்யும்போது அரை மணி நேரத்திற்கு முன்பு பாகற்காயில் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்துக் கொண்டால் கசப்பு தன்மை மாறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com