LCU-ல் அடுத்த வில்லனாக களம் இறங்கும் மாதவன்?

LCU-ல் அடுத்த வில்லனாக களம் இறங்கும் மாதவன்?

Published on
கடந்த மாதம் லாரன்ஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது .
அந்த வீடியோவில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய யுனிவர்ஸுக்கு லாரன்ஸை வரவேற்பது போல் காட்சிகள் அமைந்தது.
இதனால் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு.வில் ஏற்கெனவே இருக்கும் கைதி டில்லி, விக்ரம், லியோ உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் இந்த 'பென்ஸ்' கதாபாத்திரமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பென்ஸ் படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு மாதவனை படக்குழு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com