தண்ணீர் - 2 கப், பால் - ½ கப், கார்ன்ஃப்ளார் / சோள மாவு - 1 டீஸ்பூன், சுவைக்கு உப்பு, மிளகு- தேவைக்கேற்ப
செய்முறை:
ப்ரோக்கோலியை சிறிய துருவங்களாக நறுக்கி நன்கு கழுவவும். ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளாரை எடுத்து அதனுடன் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். அதில் ப்ரோக்கோலியைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 5 நிமிடம் வதக்கவும்.
அடுத்து 2 கப் தண்ணீர் சேர்த்து, ப்ரோக்கோலி சமைத்து தண்ணீர் வற்றும் வரை மூடி வைக்கவும். இப்போது இதை ஒரு பிளெண்டரில் எடுத்து மென்மையான வரை ப்யூரி செய்யவும்.
இந்த கலவையை மீண்டும் அதே கடாயில் ஊற்றவும், தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். பின்பு பால், கார்ன்ஃப்ளாவர் கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது சுவைக்க உப்பு மற்றும் மிளகு சேர்த்து சூடாக பரிமாறவும்.