சர்க்கரை சேர்த்த பானங்களை அடியோடு தவிர்த்து விடுவோம். எடை அதிகரித்தல் நீரிழிவு 2ம் பிரிவு பாதிப்பு இவை தடுக்கப்படும். பழ ஜூஸ் குடிப்பதை தவிர்த்து, பழங்களை வெட்டி சாப்பிடுங்கள். பழ ஜூஸ் குடிப்பதும் சர்க்கரை அதிகமான பானங்களை குடிப்பது போல் தான்.
Fast Food Junk Food இவைகளைச் தவிருங்கள். பழங்கள் காய்கறிகளை அன்றாடம் மூன்று வேளையும் சாப்பிடுங்கள்.
8 மணி நேரமாவது தூங்குங்கள். Quality sleep என்று சொல்வார்கள். அதுபோல் நன்கு ஆழ்ந்த தூக்கம் வேண்டும். முறையான தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிக ஹார்மோன் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
முறையான தூக்கம் இல்லாத 89 சதவீதம் குழந்தைகளுக்கும் 55 சதவீதம் பெரியோர்களுக்கும் அதிக எடை கூடும் பிரச்சசினை ஏற்படுகின்றது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
குடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.
அதிக ஒளியுள்ள இடத்தில் தூங்குவதற்கு முன் இருக்காதீர்கள். இது கண்களுக்கு அதிக சோர்வினை ஏற்படுத்தும். தூக்கம் கெடும் அதிக சோர்வு ஏற்படும்.
புரதம் என்பது தேவையான அளவு அவசியம் வேண்டும். உடலின் வளர்ச்சிக்கும் தேய்மானங்களை சீர்செய்யவும் புரதம் மிக அவசியம். தேவையான அளவு புரதம் இருந்தால் சர்க்கரை அளவு சீராய் இருக்கும். இரத்தக் கொதிப்பு சீராய் இருக்கும்.
அன்றாடம் குறைந்தது 20 நிமிடமாவது துரித நடை பயிற்சி செய்யுங்கள்.
புகை மது இவற்றினை அடியோடு விட்டு விடுங்கள். அன்றாடம் ஸ்வீட்ஸ் சாப்பிடும் பழக்கத்தினை விடுங்கள்.