அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Published on
மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்தது இந்த அவகேடோ பழம். இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.
அவகேடோ சாப்பிடுவதால் வயோதிகத்தால் ஏற்படும் மூட்டுவலி எலும்பு தேய்மானத்தால் தோன்றக்கூடியது. இந்தப்பழம் சாப்பிடுவதால் மூட்டுப்பகுதிகளில் எலும்பு தேய்மானம் ஏற்படாது.
எண்ணெய்ச் சத்து மிகுந்த இப்பழத்தின் சதைப் பகுதி வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. வறண்ட சருமம் உடையவர்கள் இப்பழம் தாராளமாக சாப்பிட்டு வரலாம்.
சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சினைகளை தீர்க்கும். இது சிறுநீரை அதிகளவில் உற்பத்திசெய்து சிறுநீர்ப்பாதையில் உள்ள கற்களின் அடைப்பை நீக்குகின்றது.
உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றது. செரிமான பிரச்சினைகளையும் சரிசெய்யக்கூடியது. கெட்ட கொழுப்பை குறைப்பதால் நமக்கு உடல்நலம் மற்றும் உடற்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
இதில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும்.
இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
புற்றுநோய் போன்ற கொடிய நோய் தாக்கியவர்களுக்கு அவகோடா பழம் அதிகமாக கொடுத்தால் அது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும்.
கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் ஆகியவை கட்டுப்படுத்த அவகோடா மிகவும் உதவிபுரிகிறது.
தொடர்ந்து WEB STORY-யை படிக்க LINK-ஐ க்ளிக் செய்யவும்---> https://www.maalaimalar.com/web-stories

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com