சென்னையில் சரியுமா திமுக கோட்டை? ஆதரவை அதிகம் பெறும் தவெக!
கடந்த 2024ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யால், தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட கட்சி தமிழக வெற்றிக் கழகம். 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு இக்கட்சி ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளதாக மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்திய கருத்துக் கணிப்புகள் பலவும் இக்கட்சியை வரவிருக்கும் தேர்தலில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக சித்தரிக்கின்றன.
திராவிடக் கட்சிகளின் நீண்டகால அரசியலில் மாற்றத்தை விரும்பும் புதிய தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு பலத்த ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஒருபுறம் ஆதரவு பெருகினாலும், கூட்டணி குறித்த தெளிவின்மை மற்றும் சில சிறிய கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றது போன்ற சவால்களையும் தவெக எதிர்கொள்கிறது.
இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு மாலைமலர் தரப்பில் மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட ஐசிஎஃப் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கேட்பில், அப்பகுதியில் தவெகவிற்கே அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது வில்லிவாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த வெற்றியழகன் உள்ளார்.

