

தமிழ் நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன. மேலும், நாம் தமிழர், அ.தி.மு.க. என சில கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையையும் தொடங்கிவிட்டன.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என தற்போதைய சூழலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. நடிகர் விஜயின் த.வெ.க. கட்சி முதல் முறையாக தேர்தலை சந்திப்பதை அடுத்து அவரது காட்சி எத்தனை சதவீதம் வாக்குகளை பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய திண்டிவனத்தில் vox pop நடத்தினோம். 64 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக தி.மு.க.விற்கு வாக்களிப்போம் என்று 36 பேர் தெரிவித்தனர்.
இதற்கு அடுத்தபடியாக த.வெ.க.விற்கு வாக்களிப்போம் என்று 19 பேரும், அ.தி.மு.க. கட்சிக்கு வாக்களிப்போம் என்று 6 பேரும் தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம் என்று 3 பேர் தெரிவித்தனர்.
இது மக்களின் மனநிலையை அறிய எடுக்கப்பட்ட ஒரு vox pop தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தான் நமக்கு தெரியவரும்.