TN Election 2026: தமிழக தேர்தல் 2026 - மக்கள் மனநிலை என்ன?

அரசியல் கட்சிகள் பரப்புரை பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.
TN Election 2026: தமிழக தேர்தல் 2026 - மக்கள் மனநிலை என்ன?
Published on

தமிழ் நாட்டில் வருகிற 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகள் பரப்புரை பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என தற்போதைய சூழலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. நடிகர் விஜயின் த.வெ.க. கட்சி முதல் முறையாக தேர்தலை சந்திப்பதை அடுத்து அவரது கட்சி எத்தனை சதவீதம் வாக்குகளை பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய திருவெறும்பூர் பகுதியில் vox pop நடத்தினோம். 18 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அனைவரும் (18 பேரும்) தி.மு.க.விற்கு வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.

இந்தப் பகுதியில் அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் த.வெ.க. கட்சிகளுக்கு வாக்களிப்பதாக யாரும் தெரிவிக்கவில்லை.

இது மக்களின் மனநிலையை அறிய எடுக்கப்பட்ட ஒரு vox pop தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தான் நமக்கு தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com