TN Election 2026: தி.மு.க vs த.வெ.க..! கே.கே.நகர் பகுதி மக்களின் ஆதரவு யாருக்கு?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
TN Election 2026: தி.மு.க vs த.வெ.க..! கே.கே.நகர் பகுதி மக்களின் ஆதரவு யாருக்கு?
Published on

தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்திலும், தொகுதி பங்கீட்டு பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. சில கட்சிகள் தேர்தல் பரப்புரையையும் தொடங்கிவிட்டன.

இந்த முறை தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது. நடிகர் விஜய் முதல்முறை தேர்தலை சந்திப்பதால் அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மீது அதிக கவனம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய சென்னை கே.கே.நகர் புகுதியில் vox pop நடத்தினோம்.

42 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக தி.மு.க.விற்கு வாக்களிப்பதாக 19 பேர் தெரிவித்தனர்.

அதற்கு அடுத்தபடியாக த.வெ.க.விற்கு 18 பேர் வாக்களிப்பதாகவும், அ.தி.மு.க.விற்கு 04 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு ஒருவர் வாக்களிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது மக்களின் மனநிலையை அறிய எடுக்கப்பட்ட ஒரு vox pop தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தான் நமக்கு தெரியவரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com