மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது டெலிகிராம்!

முந்தைய தேர்வில் வினோதாள் டெலிகிராமின் மூலம் பரவியது கண்டறியப்பட்டது.
டெலிகிராம்
டெலிகிராம்
Published on

மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு கடந்த ஜூன் 21 அன்று நடைபெற்றது.

முந்தைய தேர்வில் வினோதாள் டெலிகிராமின் மூலம் பரவியது கண்டறியப்பட்டது. இதனால் மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலி முடக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

நீட் மறுதேர்வு முடிவடைந்த நிலையில் டெலிகிராம் மீண்டும் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பயனர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் டெலிகிராம் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

புதிய தரவிறக்கத்திற்காக கூகுள் பிளே ஸ்டோரிலும் மீண்டும் கிடைக்கிறது.

முன்னதாக இந்த நடவடிக்கையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com