முற்றிலும் புதிய நிறத்தில் வெளியாகும் பிக்சல் 11 சீரீஸ் - லீக் ஆன முக்கிய தகவல்

பிக்சல் 11 சீரிஸ் மாடல் தோற்றத்தில் பிக்சல் 10 சீரிஸ் போன்றே காட்சியளிக்கும்.
முற்றிலும் புதிய நிறத்தில் வெளியாகும் பிக்சல் 11 சீரீஸ் - லீக் ஆன முக்கிய தகவல்
Published on

கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. இந்த வரிசையில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் தற்போது லீக் ஆகியுள்ளன. இவை தோற்றத்தில் பிக்சல் 10 போன்றே காட்சியளிக்கின்றன.

புது பிக்சல் ஸ்மார்ட்போன் சதுரங்க வடிவிலான தோற்றம் மற்றும் புதிதாக டைட்டானியம் மோச்சா நிறம் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் அளவில் பெரிய ஃபிளாட் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. ரெண்டர்களின் படி புதிய பிக்சல் 11 சீரிஸ் மாடல் தோற்றத்தில் பிக்சல் 10 சீரிஸ் போன்றே காட்சியளிக்கும்.

அம்சங்களை பொருத்தவரை பிக்சல் 11 மாடலில் 6.3 இன்ச் OLED பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், கூகுளின் புதிய டென்சார் ஜி6 பிராசஸர், மீடியாடெக் M90 மோடெம், டூயல் பிரைமரி கேமரா, 5000mAh பேட்டரி வழங்கப்படுகிறது. பிக்சல் 11 சீரிசில் ஸ்டான்டர்டு பிக்சல் 11 மாடலுடன் பிக்சல் 11 ப்ரோ மற்றும் பிக்சல் 11 ப்ரோ XL மாடல்களும் அறிமுகமாகின்றன.

வெளியீட்டு அப்டேட்:

இவற்றில் பிக்சல் 11 ப்ரோ மாடலில் 6.3 இன்ச் OLED பேனல், மூன்று பிரைமரி கேமரா சென்சார்களும், டாப் என்ட் பிக்சல் 11 ப்ரோ XL மாடலில் அளவில் பெரிய 6.8 இன்ச் OLED பேனல் மற்றும் 5200mAh பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பிக்சல் 11 சீரிஸ் வெளியீடு குறித்து கூகுள் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

விலையை பொருத்தவரை பிக்சல் 11 சீரிஸ் மாடல் 799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 75,540 முதல் துவங்கும் என்று தெரிகிறது. சமீபத்திய மெமரி சிப் விலை உயர்வு காரணமாக இந்த விலை மேலும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com