search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "soft drink"

    • திண்டிவனம் நகரின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
    • சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துக் கொண்டார்/

    விழுப்புரம்:

    திண்டிவனம் நகரின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேரு வீதியில் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு துறை அணி சார்பாக விளையாட்டுத்துறை மாவட்ட அமைப்பாளரும், நகர மன்ற உறுப்பினருமாகிய சந்திரன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரிப்பழம், குளிர்பானங்கள், நுங்கு, இளநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். 

    இதில் மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் ரிஸ்வான் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த பகுதியில் கோடை காலம் முழுவதும் நீர் மோர் பந்தல் தொடர்ந்து இயங்கும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

    • நேற்று கோவிலில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்தனர். அப்போது பஸ் மதுரை அருகே வந்தபோது ஒரு தனியார்ஓட்டலில் பஸ்சை நிறுத்தினர்.
    • அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆண்டனி ஜான் கோசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். அவரது மகன் ஆண்டனி சாங் கோசன் (வயது 14). அதே பகுதியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று ஆண்டனி சாங் கோசன் தாய் பொற்செல்வி,சகோதரி அனுசியா உடன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சென்றார். நேற்று கோவிலில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்தனர். அப்போது பஸ் மதுரை அருகே வந்தபோது ஒரு தனியார்ஓட்டலில் பஸ்சை நிறுத்தினர். அந்த ஹோட்டலில் ஆண்டனி ஜான் கோசன் குளிர்பானம் குடித்துள்ளான். குளிர்பானம் குடித்த பின்னர் 4 முறை வாந்தி எடுத்துள்ளான்.

    அவரது தாய் பொற்செல்வி பார்த்து பஸ்சில் சென்று வருவதால் இப்படி இருக்கும் என்று நினைத்து பின்னர் மயக்க நிலையில் இருந்த ஆண்டனி ஜான் கோசனை தூங்க வைத்துள்ளனர். பின்னர் பஸ் திண்டிவனம் வந்தது. பொற்செல்வி பஸ்சில் மகன் ஆண்டனிஸ் ஜான் கோசனை எழுப்பினார். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொற்செல்வி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆண்டனி ஜான் கோசனை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆண்டனி ஜான் கோசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த திண்டி வனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் எந்த காரணத்தினால் இறந்தான் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

    • காதல் மனைவி கொடுத்த குளிர்பானத்தை குடித்த வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த புதுசூரங்குடியை சேர்ந்தவர் சிவா (வயது 23), ஆட்ேடா டிரைவர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.

    அந்த பெண் திருமண வயதை அடையவில்லை என்பதால் சிவாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கடந்த 15-ந்தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

    அவர் தினமும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி அவர் கையெழுத்திட வந்தபோது அவர் காதலித்து திருமணம் செய்த பெண்ணும், மகா லட்சுமி என்பவரும் அவரிடம் பேச்சு கொடுத்து குடிக்க குளிர்பானம் கொடுத்தனர். அதனை வாங்கி குடித்ததும் சிவா மயங்கி விழுந்தார்.

    அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றிய புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×