டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு!

7 அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு!
Published on

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் 30வது லீக் போட்டி, ஏ குழுவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் இந்தியா வென்றால், ஏ குழுவில் இருந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தியா தோற்றால், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பி குழுவில் இடம்பெற்றுள்ள அணிகள் லீக் போட்டிகளை முடித்தநிலையில், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இலங்கை, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

X

Maalai Malar
www.maalaimalar.com