இந்த 4 பேர் தான் என்னை கேப்டனாக்கினார்கள் - மனம் திறந்த SKY

2024-ல் உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த 4 பேர் தான் என்னை கேப்டனாக்கினார்கள் - மனம் திறந்த SKY
Published on

20 ஓவர் உலக கோப்பையை வென்ற 3-வது இந்திய கேப்டன் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றார். டோனி, ரோகித்சர்மா வரிசையில் அவர் இணைந்தார்.

2024-ல் உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது இடத்தில் ஹர்திக் பாண்ட்யா கேப்டன் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். அவர் அணியை சிறப்பாக வழி நடத்தி 20 ஓவர் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தன்னை 20 ஓவர் அணிக்கு கேப்டனாக்கிய 4 பேர்களின் பெயரை சூர்யகுமார் யாதவ் வெளியிட்டுள்ளார். அப்போதைய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா, தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் கேப்டனாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் ஜெய்ஷா தான் முதலில் தன்னை அழைத்து பேசியதாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்து இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com