226 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்... தொடர் சரிவிலிருந்து மீளுமா டெல்லி?

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்துள்ளது ராஜஸ்தான் அணி.
226 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்... தொடர் சரிவிலிருந்து மீளுமா டெல்லி?
Published on

ஐபிஎல் 2026 தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் 43வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

போட்டியில் டாஸ் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் தரப்பில் கேப்டன் ரியான் பராக் 90 ரன்களும், த்ரூவ் ஜுரேல் 42 ரன்களும், டொனோவன் ஃபெரைரா 47 ரன்களும் அடித்தனர். டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், ஜேமிசன், அக்சர் படேல், நடராஜன் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 226 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி பேட்டிங் செய்யவுள்ளது.

இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. டெல்லி ஆடிய 8 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று 7-வது இடத்தில் தள்ளாடி வருகிறது. கடந்த 3 போட்டிகளில் டெல்லி அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com