யூனிட்டி கோப்பை கால்பந்து: அரையிறுதியில் இந்தியா தோல்வி

மூன்றாவது இடத்துக்கான போட்டி வரும் 30-ம்தேதி நடக்கிறது.
யூனிட்டி கோப்பை கால்பந்து: அரையிறுதியில் இந்தியா தோல்வி
Published on

இந்தியா, ஜமைக்கா, நைஜீரியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய தேசிய அணிகள் பங்கேற்கும் யூனிட்டி கோப்பை கால்பந்து போட்டி மே 26 முதல் 30 வரை லண்டனில் நடக்கிறது. இது இரு அரையிறுதிப் போட்டிகள், மூன்றாவது இடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 4 போட்டிகளை மட்டுமே கொண்ட குறுகிய கால தொடராகும். இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக 17 பேர் கொண்ட இந்திய அணி லண்டன் சென்றுள்ளது.

இந்நிலையில், இந்திய அணி தனது அரையிறுதி ஆட்டத்தில் ஜமைக்கா அணியை நேற்று எதிர்கொண்டது. 'தி வேலி' மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

மற்றொரு அரையிறுதியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி நைஜீரிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் நைஜீரியா - ஜமைக்கா அணிகள் மோத உள்ளன.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி 30-ம்தேதி நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com