நிலநடுக்கத்தால் பாதிப்பு: வெனிசுலாவுக்கு உதவிக்கரம் நீட்டிய பிரேசில் வீரர் நெய்மர்

வெனிசுலாவுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிவாரணப் பொருள்களை அனுப்பி வருகின்றன.
neymar
Published on

வெனிசுலாவில் கடந்த 25-ம் தேதி அதிகாலையில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வெனிசுலா நிலநடுக்கங்களில் சிக்கி 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிவாரணப் பொருள்களை அனுப்பி வருகின்றன.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவிற்கு மருத்துவ உதவி, அவசரகால நிவாரணப் பணிகளுக்காக 2.5 லட்சம் டாலரை (சுமார் 2.4 கோடி ரூபாய்) பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் வழங்கியுள்ளார்.

வெனிசுலா மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக கூறிய நெய்மர், அந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு தவிக்கும் குடும்பங்களுக்குத் தனது பங்களிப்பு வலிமையையும் ஆறுதலையும் அளிக்கும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com