டஃப் கொடுத்த கத்துக்குட்டி அணி கேப் வெர்டே: நூலிழையில் பிழைத்த அர்ஜென்டினா..!

அர்ஜென்டினாவுக்கு கடும் சவால் விடும் வகையில் விளையாடிய கேப் வெர்டே, ஓன் கோலால் நூலிழையில் தோல்வியை சந்தித்தது.
அர்ஜென்டினா- கேப் வெர்டே
அர்ஜென்டினா- கேப் வெர்டே
Published on

பிபா கால்பந்து போட்டியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கிய ரவுண்ட் ஆஃப் சுற்று 32 போட்டி ஒன்றில் நம்பர் ஒன் அணியான அர்ஜென்டினா, கத்துக்குட்டி அணியான கேப் வெர்டேவை எதிர்கொண்டது. இதில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா எளிதான வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 120 நிமிடங்கள் போராடி கேப் வெர்டே நூலிழையில் தோல்வியை சந்தித்தது.

மெஸ்சி கோல்

ஆட்டம் தொடங்கிய 29-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் முதல் பாதி நேர ஆட்ட முடிவில் இரண்டு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை.

2-வது பாதி நேர ஆட்டத்தில் கேப் வெர்டே வீரர்களில் ஆதிக்கம் செலுத்தினர். அர்ஜென்டினாவின் தடுப்பை உடைத்து 59-வது நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணியின் டெராய் டுவார்டே கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது.

அதன்பின் அர்ஜென்டினா வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 90 நிமிட ஆட்ட முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலைப் பெற்றது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

கேப் வெர்டே கேப்ரல் அபார கோல்

முதல் 15 நிமிட கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. அர்ஜென்டினா வீரர் மார்ட்டினஸ் 92-வது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல்பாதி நேரம் ஆட்டம் முடிவடைவதற்கு சற்று முன், அதாவது 103-வது நிமிடத்தில் கேப் வெர்டே அணியின் கேப்ரல் அபாரமாக கோல் அடித்தார். இதனால் முதல்பாதி நேரத்தில் 2-2 என ஸ்கோர் சமநிலை பெற்றது. லெஃப் சைடு கார்னர் அருகே பாஸ் செய்த பந்தை இரண்டு அர்ஜென்டினா வீரர்களை ஏமாற்றி, கோல் எல்லைக்கு வெளியே இருந்து சிறப்பாக தூக்கி அடித்தார். இந்த பந்து கோல் வலைக்குள் புகுந்தது.

கேப் வெர்டே வீரர் கேப்ரல்
கேப் வெர்டே வீரர் கேப்ரல்

ஓன் கோல்

111-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அடித்த பந்தை கேப் வெர்டே அணியின் டைனி தடுக்க முயன்றார். ஆனால், பந்து அவர் மீது பட்டு, அவர்களது கோல் கம்பத்திற்குள் புகுந்தது. இதனால் ஓன்கோல் மூலம் அர்ஜென்டினாவிற்கு ஒரு கோல் கிடைத்தது. ஆகவே, அர்ஜென்டினா 3-2 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 120 நிமிடங்கள் வரை அர்ஜென்டினாவும் கோல் அடிக்கவில்லை. கேப் வெர்டேவை அணியையும் கோல் அடிக்க விடவில்லை. இதன் காரணமாக அர்ஜென்டினா 3-2 என வெற்றி பெற்றது. 120 நிமிடங்கள் போராடி ஓன் கோலால் அர்ஜென்டினா வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com