பிஃபா உலக கோப்பை: மாற்று வீரராக களம் இறங்கி அசத்திய மெஸ்சி- ஜோர்டானை 3-1 என வீழ்த்தியது அர்ஜென்டினா

ஜோர்டானுக்கு எதிரான போட்டியில் மாற்று வீரராக களம் இறங்கிய மெஸ்சி, 80வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
மெஸ்சி
மெஸ்சி
Published on

பிஃபா உலக கோப்பையில் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு இரண்டு போட்டிகள் நடைபெற்றது. ஜே பிரிவில் நடைபெற்ற இந்த போட்டிகளில் ஒன்றில் அர்ஜென்டினா- ஜோர்டான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

மெஸ்சி கோல்

இன்றைய போட்டியில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான மெஸ்சி, தொடக்கத்தில் களம் இறங்கவில்லை. பெஞ்சில் இருந்தார். ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் கியோவானி லோ செல்கோ முதல் கோலை அடித்தார். 31-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்கு பொனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி மார்ட்டினஸ் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் ஆர்ஜென்டினா 2-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. 55-வது நிமிடத்தில் ஜோர்டான் அணியின் முசா அல்-தாமரி கோல் அடித்தார். 59-வது நிமிடத்தில் மெஸ்சி மாற்று வீரராக களம் இறங்கினார். அவர் 80-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா 3-1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஜே குரூப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஆஸ்திரியா 3-வது இடத்தை பிடித்துள்ளது.

நாடு கோல் அடித்தவர்
அர்ஜென்டினா 3 செல்கோ (19 P)
மார்ட்டினஸ் (31 P)
மெஸ்சி (80)
ஜோர்டான் 1 முசா அல்-தாமரி (55)

ஆஸ்திரியா- அல்ஜீரியா

மற்றொரு போட்டியில் ஜே பிரிவில் இடம் பிடித்துள்ள ஆஸ்திரியா- அல்ஜீரியா அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்ததால் போட்டி டிராவில் முடிவடைந்தது.

ஆட்டம் தொடங்கிய 28-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் மார்கோ அர்னாடோவிச் கோல் அடித்தார். முதல்பாதி நேர ஆட்டம் நிறைவடைவதற்கான கடைசி நிமிடமான 45-வது நிமிடத்தில் அல்ஜீரியாவின் ரபிக் பெல்காலி கோல் அடித்தார். இதனால் 1-1 என இரு அணிகளும் சமநிலை பெற்றன.

2-வது பாதி நேர ஆட்டத்தில் கோல் மழை பொழிந்தன. ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் மால்சல் சபிட்ஜெர் கோல் அடித்தார். அதற்கு போட்டியாக அல்ஜீரியாவின் ரியாத் மரேஸ் 60-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் 90 நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை.

காயம் மற்றும் போட்டி நிறுத்தம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 3-வது நிமிடத்தில் அதாவது 90+3 நிமிடத்தில் ரியாத் மரேஸ் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் அல்ஜீரியா 3-2 என முன்னிலை பெற்றது. இதன் காரணமாக அர்ஜீரியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 90+6-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவின் சசா கலாஜ்ட்ஜிக் கோல் அடிக்க போட்டி 3-3 என டிராவில் முடிந்தது. இதன்மூலம் ஆஸ்திரியா 4 புள்ளிகள் பெற்று கோல்கள் அடிப்படையில் 2-வது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நாடு கோல் அடித்தவர்
ஆஸ்திரியா 3 மார்கோ அர்னாடோவிச் (28)
மால்சல் சபிட்ஜெர் (55)
மெஸ்சி (80)
சசா கலாஜ்ட்ஜிக் (90+6)
அல்ஜீரியா 3 ரபிக் பெல்காலி (45)
ரியாத் மரேஸ் (60, 90+3)
X

Maalai Malar
www.maalaimalar.com