தென்கொரியா- செக்குடியரசு போட்டியின்போது இருக்கைகள் காலியாக இருந்தனவா? பிஃபா விளக்கம்

தென்கொரியா- செக்குடியரசு போட்டிக்காக 44,985 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன என்று பிஃபா தெரிவித்துள்ளது.
பிஃபா உலக கோப்பை கால்பந்து
பிஃபா உலக கோப்பை கால்பந்துபிஃபா உலக கோப்பை கால்பந்து
Published on

48 அணிகள் பங்கேற்று விளையாடும் மிகப்பெரிய உலக கோப்பை தொடரான பிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் போட்டி நடைபெற்று வருகிறது.

தென்கொரியா- செக்குடியரசு போட்டி

நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ஒரு போட்டியில் தென்கொரியா- செக்குடியரசு மோதின. இந்த போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலராஜா நகரில் நடைபெற்றது. இங்குள்ள மைதானம் 46 இருக்கைகள் கொண்டது. போட்டியின்போது பெரும்பாலான இருக்கைகள் காலியாக காட்சி அளித்தன.

பிஃபா விளக்கம்

இதற்கு காரணம் டிக்கெட் விலையை அதிக அளவில் உயர்த்தியதுதான் என பிஃபா மீது ரசிகர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் 46 இருக்கைகளில் 44,985 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ரசிகர்கள் நடைபாதைகளில் எழுந்து நின்று போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால்தான் இருக்கைகள் காலியாக இருந்தன என்று பிஃபா விளக்கம் கொடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com