விராட் கோலி ருத்ர தாண்டவம்.. குஜராத்தை சம்பவம் செய்த ஆர்சிபி - 206 ரன்களை எட்டி வெற்றி

44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து விராட் கோலி அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்.
விராட் கோலி ருத்ர தாண்டவம்.. குஜராத்தை சம்பவம் செய்த ஆர்சிபி -  206 ரன்களை எட்டி வெற்றி
Published on

ஐ.பி.எல்.தொடரின் 34 வது லீக் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. அத்ன்படி, குஜராத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன், சுப்மன் கில் இறங்கினர். ஆரம்பம் முதலே சாய் சுதர்சன் அதிரடியாக ஆடினார். 33 பந்தில் சாய் சுதர்சன் அரை சதம் கடந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், சந்தித்த 2-வது பந்தை சிக்சருக்கும் 3-வது பந்தை பவுண்டரிக்கும் அடித்து அசத்தினார். மறுபுறம் பட்லர் 25 (16) ரன்களில் அவுட்டானார். பின்னர் வந்த ஹோல்டர் சிக்சர், பவுண்டரிகளை விளாச ஸ்கோர் 200-ஐ கடந்தது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 205 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் சுயாஷ், ஹேசல்வுட், புவனேஷ்வர் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது.

44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து விராட் கோலி அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். கோலியுடன் இணைந்து அதிரடி காட்டிய படிக்கல், வெறும் 19 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டினார். இறுதியில் 23 ரன்களுடன் குருணால் பாண்டியாவும் அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார்.

எனவே 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை, ஆர்சிபி அணி 18.5 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com