600-க்கும் அதிக ரன்கள்... புது சாதனை படைத்த விராட் கோலி

விராட் கோலி 25 பந்துகளில் 43 ரன்களை குவித்தார்.
விராட் கோலி
Published on

ஐ.பி.எல். 2026 டி20 தொடரில் விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்று (மே 26) இரவு தர்மசாலாவில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஐ.பி.எல். 2026 தொடரின் முதலாவது தகுதிச்சுற்று போட்டியில், விராட் கோலி 25 பந்துகளில் 43 ரன்களை விளாசினார்.

துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் ஆடத் தயாரான நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், முன்னாள் ஆர்.சி.பி. கேப்டனை போல்ட் செய்து கோலியின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

கோலி ஏமாற்றத்துடன் வெளியேறிய போதிலும் அவரது இந்த சிறு பங்களிப்பு, 2026 ஐ.பி.எல். தொடரில் அவர் 600 ரன்களை குவிக்க உதவியது. இந்த சீசனில் 600 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியதன் மூலம், கோலி தனது ஐ.பி.எல். வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லை சேர்த்துள்ளார்.

ஒரு ஐபிஎல் சீசனில் 600 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை விராட் கோலி ஆறாவது முறையாக எடுத்துள்ளார். ஐ.பி.எல். தொடரின் வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் தொடர்ச்சியாக ஆறு முறை 600 அல்லது அதற்கும் அதிக ரன்களை இதுவரை விளாசியதில்லை.

கடந்த 2025 ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி 657 ரன்கள், 2024 ஐ.பி.எல்.-இல் 741 ரன்கள், 2023 ஐ.பி.எல். தொடரில் 639 ரன்களை குவித்துள்ளார். இதுதவிர 2016 ஐ.பி.எல்.-இல் 937 ரன்கள் மற்றும் 2013-இல் 634 ரன்களை விளாசியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com