டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: நியூசிலாந்து- இங்கிலாந்து இன்று மோதல்

நியூசிலாந்து அணி தோற்றால் பாகிஸ்தான் அணிக்கு அரைஇறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கும். இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரைஇறுதியை உறுதி செய்வதோடு, புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடிக்கும்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: நியூசிலாந்து- இங்கிலாந்து இன்று மோதல்
Published on

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் சுற்றில் இங்கிலாந்து தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை போட்டுத்தாக்கி முதல் அணியாக அரைஇறுதிக்கு முன்னேறியது. முந்தைய பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 165 ரன் இலக்கை கேப்டன் ஹாரி புரூக்கின் பிரமாதமான சதத்தால் எட்டிப்பிடித்தது. சூப்பர் சுற்றில் 'ஹாட்ரிக்' வெற்றி யோடு புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஆவலுடன் உள்ளது.

நியூசிலாந்து அணி ஒரு வெற்றி, ஒரு முடிவில்லை என 3 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. இலங்கைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 84 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த போதிலும் கேப்டன் மிட்செல் சான்ட்னெர் (47 ரன்). கோல் மெக்கோன்சி (31 ரன்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 168 ரன் திரட்டியதோடு, இலங்கையை 107 ரன்னில் சுருட்டியது. அதே உத்வேகத்துடன் இன்று இங்கிலாந்தையும் பதம் பார்க்க காத்திருக்கிறார்கள்.

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரைஇறுதியை உறுதி செய்வதோடு, புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடிக்கும். தோற்றால் பாகிஸ்தான் அணிக்கு அரைஇறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கும். ஆனால் ரன்ரேட்டில் நியூசிலாந்து திடமாக இருப்பதால் தோற்றாலும் அந்த அணிக்கே அடுத்த சுற்றை எட்டுவதற்கான வாய்ப்பு அதிகம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com