எனது சதத்தை முன்பே கணித்தார் டு பிளசிஸ்- விராட் கோலி

அதிரடியாக விளையாடி ஆர்சிபி அணியின் வெற்றி முக்கிய பங்கு வகித்த விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.முதல் 3 வீரர்களில் யாரோ ஒருவர் சதமடிக்க போகிறார் என என் உள்ளுணர்வு சொல்கிறது என பாஃப் என்னிடம் கூறினார்.
எனது சதத்தை முன்பே கணித்தார் டு பிளசிஸ்- விராட் கோலி
Published on

ஐபிஎல் தொடரின் 65-வது லீக் போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 186 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 19.2 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி ஆர்சிபி அணியின் வெற்றி முக்கிய பங்கு வகித்த விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் நான் இன்று சதம் அடிப்பேன் என்று அணியின் கேப்டன் பாஃப் முன்பே என்னிடம் தெரிவித்தார் என விராட் கோலி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நாங்கள் பேட்டிங் செய்ய தொடங்குவதற்கு முன்பு பேட்டிங் வரிசையில் உள்ள முதல் 3 வீரர்களில் யாரோ ஒருவர் சதமடிக்க போகிறார் என என் உள்ளுணர்வு சொல்கிறது என பாஃப் என்னிடம் கூறினார். அது நீங்கள்தான் என நான் கூறினேன். அதற்கு இல்லை நீங்கள்தான் என்றார். அதுபோலவே நானும் சதம் விளாசினேன்.

என விராட் கோலி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com