கோலி, ரோகித் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்- மைக் ஹஸ்சி

விராட் கோலி, ரோகித் சர்மா நிறைய ரசிகர்களை சேர்க்கக்கூடிய தரம் கொண்டவர்கள். கடந்த காலங்களிலும் இவர்கள் விமர்சனங்களை தாண்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கோலி, ரோகித் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்- மைக் ஹஸ்சி
Published on

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததால் கடும் விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை குறைந்தது 4-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் தவிக்கிறது.

இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பார்ம் பெரிய அளவில் இல்லை. அவர்களது பார்ம் குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விராட் கோலி, ரோகித் சர்மா நிறைய ரசிகர்களை சேர்க்கக்கூடிய தரம் கொண்டவர்கள். கடந்த காலங்களிலும் இவர்கள் விமர்சனங்களை தாண்டி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி இருக்க இவர்கள் நிச்சயம் ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com