IPL 2026 | தடுமாறிய சிஎஸ்கே... கண்கலங்கிய ஜடேஜா- வைரலாகும் வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, ஜடேஜா மைதானத்தில் கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
IPL 2026 | தடுமாறிய சிஎஸ்கே... கண்கலங்கிய ஜடேஜா- வைரலாகும் வீடியோ
Published on

கவுகாத்தி:

கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, ராஜஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது, ரவீந்திர ஜடேஜா மைதானத்தில் கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவர், தனது முந்தைய அணியான சென்னைக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசிய ஜடேஜா, 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

குறிப்பாக சர்பராஸ் கான் மற்றும் சிவம் துபே ஆகியோரின் விக்கெட்டுகள் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி, 5 முறை சாம்பியனான சென்னை அணியை 127 ரன்களுக்கு சுருட்டியது.

இந்த ஆட்டத்தின் நடுப்பகுதியில் ஜடேஜா உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியது ரசிகர்களை உலுக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பல ஆண்டுகளாக சென்னை அணியின் முக்கிய வீரராகவும், ரசிகர்களின் செல்லப் பிள்ளையாகவும் இருந்த ஜடேஜா, சென்னை அணி தடுமாறியதை பார்க்க முடியாமல் கண்கலங்கியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com