தமிழக சட்டசபை தேர்தல்- பத்மநாபபுரம் தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தது அதிமுக

குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் பழனிசாமிக்கு பதிலாக செல்வி ராமஜெயம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையகம்
அதிமுக தலைமையகம்
Published on

சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 178 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் முதலில் 6 வேட்பாளர்களும், இரண்டாவது கட்டமாக 171 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதன்பின்னர் பத்மநாபபுரம் தொகுதிக்கான வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்டது. பத்மநாபபுரம் தொகுதியில் ஜான் தங்கம் போட்டியிடுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

இதேபோல் குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். பழனிசாமிக்கு பதிலாக செல்வி ராமஜெயம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில பா.ம.க., பா.ஜ.க, த.மா.கா. உள்பட கூட்டணி கட்சிகளுக்கு 55 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com