

சட்டசபை தேர்தலில் தி.மு.க. 173 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
கடந்த 6-ந்தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினை 2-வது நாளாக நேற்று, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் 120-க்கும் மேற்பட்ட தி.மு.க. வேட்பாளர்கள், தங்கள் மாவட்ட செயலாளர்களுடன் சந்தித்தனர். அப்போது, தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிக்கும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.