IPL 2026 | RR விற்பனையில் வார்னே செய்த சிறப்பான சம்பவம் - ரூ.460 கோடி ஜாக்பாட் அடித்த பின்னணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விற்பனையில் கிரிக்கெட் ஜாம்பவான் வார்னே செய்த சிறப்பான சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
RR & WARNE DEAL
RR & WARNE DEAL
Published on

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விற்பனையில் கிரிக்கெட் ஜாம்பவான் வார்னே செய்த சிறப்பான சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் 10 அணிகளில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த அணியின் உரிமையாளர் அணியை விற்கப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் அமெரிக்க தொழில் அதிபரான கல் சொமானி தலைமையிலான கூட்டமைப்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளார். 1.63 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய பண மதிப்பில் சுமார் 15281.22 கோடி) அணியை வாங்கியுள்ளார்.

அந்த கூட்டமைப்பில் வால்மார்ட்டின் ராப் வால்டன், போர்டு நிறுவனத்தின் ஹாம்ப் குடும்பத்தினர் இணைந்துள்ளனர். 2026 ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர், உரிமையாளர் மாற்றம் நடைமுறைக்கு வரும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விற்பனையில் கிரிக்கெட் ஜாம்பவான் வார்னே செய்த சிறப்பான சம்பவம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக வார்னே செயல்பட்டு கோப்பையை வெண்றுகொடுத்தார். மொத்தம் 4 வருடம் அந்த ராஜஸ்தான் அணியின் வார்னே விளையாடினார். அதற்காக மொத்தமாக அவர் 9 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார். ஆனால் சம்பளம் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் அணியின் பங்குகளில் 0.75% பங்கு அவருக்கு கொடுக்கவேண்டும் என்று நிர்வாகத்திடம் அவர் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளார். ஒப்பந்தம் போடும்போது ராஜஸ்தான் அணியின் மதிப்பு ரூ.320 கொடிதான். அதன்பிறகு 4 சீசன்களில் விளையாடி மொத்தம் 3% பங்குகளை வார்னே வைத்திருந்தார்.

தற்போது ராஜஸ்தான் அணியின் விற்பனையில் அவரது 3% பங்கு விற்பனையாக அவருக்கு ரூ.460 கோடி கிடைத்துள்ளது. வார்னே தற்போது உயிரோடு இல்லையென்பதால் இந்த மொத்த பணமும் அவரது குழந்தைகளுக்கு கொடுக்கப்படவுள்ளது.

வார்னே 0.75% பங்குகேட்கும்போது அப்போது அதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2 கோடி தான். இப்போது அதன் மதிப்பு ரூ.460 கோடி. சுழற்பந்து வீச்சில் மட்டுமல்ல முதலீடு விஷயத்தில் வார்னே புத்திசாலியாக செயல்பட்டுள்ளார் என்றால் அது மிகையாகாது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com