

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐதராபாத்தை எளிதில் வீழ்த்தியது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது.
கேப்டன் இஷான் கிஷன் 38 பந்தில் 80 ரன்னும் (8 பவுண்டரி, 5 சிக்சர்), அனிகேத் வர்மா 18 பந்தில் 43 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) கிளாசன் 22 பந்தில் 31 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஜேக்கப் டபி, ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், அபி நந்தன் சிங், சுயாஷ் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.
பின்னர் ஆடிய பெங்க ளூரு அணி 26 பந்து எஞ்சி இருந்த நிலையில் 202 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வீராட் கோலி 38 பந்தில் 69 ரன்னும் (5 பவுண்டரி, 5 சிக்சர்), தேவ்தத் படிக்கல் 26 பந்தில் 61 ரன்னும் (7 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ரஜத் படிதார் 12 பந்தில் 31 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். டேவிட் பெய்ன் 2 விக்கெட்டும், ஜெயதேவ் உனட்கட், ஹர்ஷ் துபே தலா 1 விக்கெட்டும் கைப் பற்றினார்கள்.
பெங்களூரு அணி சாதனை
200 ரன்னுக்கு மேலான இலக்கை அதிவேகத்தில் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களரூ அணி புதிய சாதனை படைத்தது.
ஐதராபாத் அணி நிர்ணயித்த 202 ரன் இலக்கை பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் எடுத்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ் தான் ராயல்ஸ் 210 ரன் இலக்கை 25 பந்து எஞ்சியி ருந்த நிலையில் எடுத்தது. அதாவது 15.5 ஓவரில் 212 ரன் எடுத்து இருந்தது. ராஜஸ்தானின் இந்த சாதனையை பெங்களூரு அணி முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தியது.
4-வது முறையாக பெங்களூரு அணி 200 ரன்னுக்கு மேல் இலக்கை வெற்றிகரமாக எடுத்தது. கடந்த 4 முயற்சியில் 3-வது தடவையாக 200 ரன்னுக்கு மேல் இலக்கை எடுத்தது. முதல் 18 முயற்சியில் 200 ரன்னுக்கு மேல் இலக்கை அந்த அணி 1 தடவை மட்டும் எடுத்து வெற்றி பெற்று இருந்தது.
வீராட்கோலி 260-வது இன்னிங்சில் 64-வது அரை சதத்தை பதிவு செய்தார். ஐதராபாத்துக்கு எதிராக 7-வது தடவையாக 50 ரன்னுக்கு மேல் எடுத்தார். இதன் மூலம் டூபிளசிஸ், சஞ்சு சாம்சன் ஆகியோரை முந்தினார். இதற்கு முன்பு இருவரும் தலா 6 முறை அரை சதம் எடுத்து இருந்தனர்.
மேலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக அதிக ரன் எடுத்தும் வீராட் கோலி முத்திரை பதித்தார். அவர் 874 ரன் எடுத்துள்ளார்.
பெங்களூரு அணி 2-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் வருகிற 5ந்தேதி பெங்களூரில் நடக்கிறது. ஐதராபாத் அணி 2-வது போட்டியில் கொல்கத்தா வை வருகிற 2-ந்தேதி சந்திக்கிறது.